மாதவிடாய் குடிசையில் தொடரும் உயிரிழப்பு

  • 5 years ago
மாதவிடாய் காலத்தில் பெண்களை
தனி குடிசையில் தங்க வைக்கும் பழக்கம்
நேபாளத்திலும் இருக்கிறது.

பஜூரா மாவட்டத்தில் அவ்வாறு குடிசையில் தங்கிய
35 வயது பெண்ணும் அவரது 2 மகன்களும் இறந்தனர்.
மூன்று உடல்களும் கருகிய நிலையில் இருந்தன.

’இரவில் குளிரை சமாளிக்க தீ மூட்டி தூங்கினர்.
அதிக புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கும்’
என்று கலெக்டர் கேசுவலாக சொன்னார்.

குடிசையில் பாதுகாப்பும் கிடையாது.
அவசர உபயோகத்துக்கான பொருட்களும் கிடையாது.
எனவே, காட்டு விலங்குகள் புகுந்து தாக்கி கொல்லும்
சம்பவங்களும் அடிக்கடி நடப்பதுண்டு.

பெண்களை இப்படி வீட்டுக்கு வெளியே தங்கவைத்தால்
கணவனுக்கு 3 மாதம் சிறை, 3000 அபராதம் விதிக்கப்படும்
என்று 2005 ல் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் சொன்னது.
ஆனாலும் அந்த பழக்கம் முடிவுக்கு வரவில்லை.

Recommended