மர்மமான முறையில் இறக்கும் மயில்கள்

  • 5 years ago
தூத்துக்குடி மாவட்டம்; புதியம்புத்தூர் அருகில் உள்ள சாமிநத்தம் காட்டுப்பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான மின்கம்பத்தின் கீழ் பகுதியில் ஏற்கனவே ஒரு மயில் இறந்து கிடந்த நிலையில் இன்று மதியம் ஒரு மயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒட்டநத்தம்,முறம்பன் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது. எனவே தேசியப்பறவையான மயில் இனத்தை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஓட்டப்பிடாரம் பகுதியில் பல இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு செல்ல அரசு புறம்போக்கு ஓடைப்பகுதிகளில் நட்டப்பட்டிருக்கும் மின்கம்பங்களால் பொதுமக்கள்,பறவைகள் மற்றும் ஆடு மாடுகளுக்கு பெரும் ஆபத்து வரும்முன் காக்கப்படுமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.