குடியிருப்பு மத்தியில் செல்போன் கோபுரம் பொதுமக்கள் எதிர்ப்பு
  • 5 years ago
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியாசி குண்டு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியின் குடியிருப்பு மத்தியில் உள்ள பாத்திமா நகரில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது எனவும் இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக கூடும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கிச்சிபாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பொது மக்கள் எதிர்ப்பை மீறி குடியிருப்பு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க விடமாட்டோம் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மேலும் குடியிருப்பு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The cellphone towers among residents are public protesters
Recommended