இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம்.. போஸ்டர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்த சசிகலா- வீடியோ

  • 5 years ago
நடிகர் விமல் நடித்து திரையில் ஒடிக்கொண்டிருக்கும் " இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு" என்ற திரைப்படத்தில் ஆபாசங்கள் இருப்பதாக மதுரை மாவட்ட மாதர் சங்கத்தினர் சார்பாக மதுரை காளவாசல் சண்முகா திரையரங்கு முன்பு போஸ்டர்களை கிழித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்புக்கு குவிக்கபட்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தை அப்புறபடுத்த முயன்ற போது மாதர் சங்கத்தினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாதர் சங்க மாவட்ட செயலாளர் சசிகலா,இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு" என்ற திரைப்படம் மதுரையில் 12 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் போஸ்டர்களை மிகவும் ஆபாசமாக மதுரை நகர் & புறநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், சிறுமிகள், மனநிலை பாதிக்கப்படுவதோடு பாலியல் குற்றங்களும் நடைபெற வாய்ப்புள்ளது.மேலும் இப்படத்தில் யு, ஏ சான்றிதழ் கூட கொடுக்கப்படவில்லை.எனவே அனைத்து திரையரங்குகளிலும் இத்திரைப்படத்தை உடனே நிறுத்த வேண்டும் மேலும் மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை உடனடியாக கிழிக்க வேண்டும் என்று கூறினார்.

DES: Sasikala is a film where he is tired of throwing posters

Recommended