பள்ளிக் குழந்தைகளை தாக்கிய சோக்கிதானி ஊழியர்கள்- வீடியோ

  • 5 years ago


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவருகிறது, சோக்கிதானி கேளிக்கை கிராமம். ராஜஸ்தான் கலாசார அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேளிக்கை கிராமத்தில் பொழுதைக் கழிப்பதற்காக, தினந்தோறும் ஏராளமானோர் அங்கு குவிகின்றனர். அவ்வப்போது பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துவந்து சுற்றிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி, காலை, 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோக்கிதானி கிராமத்துக்கு அழைத்துச்சென்றுள்ளது பள்ளி நிர்வாகம். அவர்களை பத்திரமாகக் கவனித்துக்கொள்வதற்காக, 22 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளை வரை எல்லாம் சரியாகவே சென்றிருக்கிறது. ஆனால், உணவு இடைவேளையின்போது குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு, அனைத்து ஆசிரியர்களும் வேறெங்கோ சென்றுவிட்டனர். அந்த நேரத்தில், அனைத்து குழந்தைகளையும் அங்கிருக்கும் சிறிய அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர், கேளிக்கை கிராமத்தின் ஊழியர்கள் சிலர் கதவைத்திறந்து உள்ளே வந்த சில ஊழியர்கள், அங்கிருந்த குழந்தைகளை கம்பால் அடுத்து துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியர் சோக்கிதானி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சோக்கிதானி ஊழியர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ், பங்கச் ஆகிய இருவரை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Recommended