தமிழீழம் மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்கும்- பழ.நெடுமாறன்- வீடியோ

  • 6 years ago
தஞ்சாவூர் மாவீரர் தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ, நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது தனி ஈழம் அமைந்தால் மட்டுமே ஈழம் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்கும் இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் சிங்கள இனவாதமே மேலோங்கி இருக்கும் இந்திய கடற்படை தளபதி கவுல் எழுதிய புத்தகத்தில் இலங்கை நட்பு நாடாக இருக்கும் வரை இந்தியாவிற்கு ஆபத்தில்லை என்று எழுதினார். அது இன்று நடந்தேறி விட்டது. சீனா இலங்கையில் கால் பதித்து விட்டது இது ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து என்பதை விட இந்திய அரசுக்கு பேராபத்து மத்தியில் காங்கிரஸ்' பி.ஜே.பி.யார் ஆட்சியில் இருந்தாலும் ஈழத் தமிழர்களை பலிகடா ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.

des:The event was celebrated in front of the Thanjavur Mavirar Day celebrations at the Mullivaikka Thalai. The event was headed by the Head of World Tamil Forum, Nedumaran.