விமானம் 9 மணி நேரம் தாமதம்-வீடியோ

  • 6 years ago
மதுரையிலிருந்து கொழும்பு சென்ற விமானம் 9 மணி நேரம் தாமதாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

நள்ளிரவுக்குப் பிறகு 12 மணி 50 நிமிடங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து, இலங்கைத் தலைநகர் கொழும்புவிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், அதிகாலை 3 மணிக்கு புறப்படும் என முதலிலும், அதன் பிறகு காலை 7 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு பின்னர் காலை 9.50 மணிக்குத்தான் விமானம் புறப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12.50-க்குப் புறப்பட வேண்டிய விமானம், 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் சுமார் 68 பயணிகள் அவதியடைந்தனர். இலங்கையில் தமது உடன் பிறந்த சகோதரரின் இறப்புக்குக் கூட உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை எனவும் பயணி ஒருவர் வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

விமானத்தை இயக்குவது தொடர்பான காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து காலையில் வேறு விமானம் மூலம் பயணிகளை கொழும்புவிற்கு அனுப்பி வைத்ததாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விளக்கமும், வருத்தமும் தெரிவித்துள்ளது.

Des: Passengers were seriously injured as the plane departed from Colombo to Madurai for 9 hours.

Recommended