கிணற்றில் தவறி விழுந்த யானை-வீடியோ

  • 6 years ago
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த யானை வனத்துறையினரின் முயற்சியால் மீட்கப்பட்டது. ஒசூரை அடுத்துள்ள உப்புப் பள்ளம் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்தன.இந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற 10 யானைகள் உப்புப்பள்ளம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தன. அதில் ஒரு குட்டியானை, பாப்பண்ணா என்ற விவசாயியின் கிணற்றில் தவறி விழுந்தது.ச்யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் மணலை நிரப்பியும், வழியையும் உண்டாக்கினர். இதையடுத்து, கிணற்றில் இருந்து சிரமப்பட்டு வெளியே வந்த வெளியே வனப் பகுதிக்குள் சென்றது.

Des: In the Krishnagiri district, the elephant that failed in the well was recovered by the efforts of the Forest Department.

Recommended