சொத்து தகராறில் பலி ! 4 பேர் மீது வழக்குப்பதிவு- வீடியோ

  • 6 years ago
வாணியம்பாடி அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இளையநகரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது 68 இவருடைய சொந்தமான இடத்திற்கு பக்கத்திலேயே சுமார் 135 சதுர அடி இடத்தில் இவருடைய உறவினர் வெங்கடேசன் கடந்த 1 வருடத்திற்கு முன்பு வீடுகட்ட பேஸ் மென்ட் போட்டுள்ளார்.அந்த இடத்தில் கிருஷ்ணனின் இடமும் சேருவதால் வீட்டினை சிறிது தள்ளி கட்டிக்கொள்ளுமாறு வெங்கடேசனிடம் கிருஷ்ணன் கூறியுள்ளார்.அப்போது வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தி கிருஷ்ணனுக்கு ரூ.1.50 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார்.அந்த பணத்தை கொடுக்க கால தாமதம் செய்து வெங்கடேசன் வீட்டை கட்டி முடிக்கும் தருவாயில் நேற்று கிருஷ்ணன் வெங்கடேசனிடம் சென்று பணத்தை தருமாறு கூறியுள்ளார்.அதற்கு வெங்கடேசன் தர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுஇதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.மோதலின் போது 4 பெரும் சேர்ந்து கிருஷ்ணனை கீழே தள்ளி அவரை மார்பு மீது காலால் உதைத்து கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கியுள்ளார்.அவரை மீட்டு அவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,சம்பவம் குறித்து கிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் அங்கு சிகிச்சைபெற்று வந்த கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிருஷ்ணனை தாக்கி கொலை செய்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

Des: One of the victims of the dispute over property dispute near Vaniyambadi

Recommended