போலீஸ் எட்டி உதைத்ததில் இளைஞர் கால் உடைந்த சம்பவம்- வீடியோ

  • 6 years ago
உதவி காவல் ஆய்வாளர் விசாரணை என்ற பெயரில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து இளைஞர் காலை ஒடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பழனி அருகே கனக்கன்பட்டி பொட்டம்பட்டியில் பழனிச்சாமி மகன் ராதாகிருஷ்னன் வயது 32 என்பவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.இவர் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.அதில் முதல் மனைவி வீரம்மாள் அவரின் மகள் ஜானகி ஆகிய இருவரும் வீட்டின் இடபிரச்சணை சம்மந்தமாக கடந்த 09/10/2018 அன்று ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் அடிப்படையில் இந்த புகாரின் விசாரணை அதிகாரியாக உதவி ஆய்வாளர் கோகுலகண்னன் நியமித்துள்ளனர்.
நேற்று 10/10/2018 காலை 10.30 மணிக்கு விசாரணைக்காக பொட்டம்பட்டி சென்ற கோகுலகண்னண் வீட்டில் மது போதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்னன் என்பவரை அருகில் இருந்த ரீபர் கட்டையால் அடித்துள்ளார்.மேலும் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்ததில் ராதாகிருஷ்னனுக்கு வலது காலில் முறிவு ஏற்ப்பட்டு வலியால்
துடித்துள்ளார்.காவல் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் மருத்துவர் கேட்டால் இருசக்கர வாகணத்தில் இருந்து கீழே விழுந்து விட்டான் என்று கூறுங்கள் உண்மையை சொன்னால் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று கூறி சென்று விட்டார்.வலி தாங்க முடியாமல் துடித்த ராதாகிருஷ்னனை ஆட்டோவின் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகச்சைக்காக சேர்த்தனர்.அப்போது ஆயக்கிடி காவல் நிலையத்தை சேர்ந்த மணி காவல் அதிகாரி பாதிக்கப்பட்டிருந்தவரன் மனைவியிடம் ரூ.1500 ரூபாயை கொடுத்து விட்டு யாரிடமும் சொல்லாதே என கூறிவிட டு சென்றிள்ளார்.எனவே தப்பு செய்த காவலர்களை தண்டிக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்..

police beat men in palani

Recommended