மனைவியின் அக்காவை துப்பாக்கியால் சுட்டுகொன்ற விவசாயி-வீடியோ

  • 6 years ago
குடும்பதகராறில் மனைவியின் அக்காவை துப்பாக்கியால் சுட்டுகொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது

வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு அருகேயுள்ள அல்லேரி மலைப்பகுதி கொல்லைமேட்டை சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை இவர் மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி குடும்பதகராறு இருந்து வந்தது இதில் மனைவி கோபத்தில் அவரின் தாய் வீடான சிவநாதபுரம் கல்லாங்குளம் கிராமத்திற்கு சென்றுவிட்டார் அங்கு சென்று அண்ணாமலை மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்து தகராறில் ஈடுபட்டார் அவர் வீட்டிற்கு வர மறுத்ததால் அண்ணாமலை ஆத்திரமடைந்த அண்ணாமலை அவர் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து அவர் மனைவின் அக்கா உமாவை சுட்டார் இதில் அவர் இறந்து போனார் இதுகுறித்த வழக்கு விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கு வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி அண்ணாமலை மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் இதனால் அண்ணாமலை கைது செய்யப்பட்டு வேலூர் தொரப்பாடி ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்

Des: A farmer sentenced to life imprisonment for killing wife's sister in family

Recommended