கழிவறை இல்லாததால் பிறந்த ஜோடி ! கணவன் தற்கொலை-வீடியோ

  • 6 years ago
வீட்டில் கழிவறை இல்லாததால் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் திருமணமாகி மூன்று நாளில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி இவரது மனைவி நல்லம்மாள் கூலித்தொழிலாளியான இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் செல்லதுரை வயசு 26 இவர் சேலத்தில் உள்ள தனியார் கம்பனியில் வேலை செய்து வருகிறார். இதே போன்று சேலம் பள்ளப்பட்டி சேர்ந்த தீபா என்ற பெண்ணும் அதே கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்பு ஓமலூர் அருகேயுள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியிலுள்ள செல்லதுரையின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்து பார்த்த காதல் மனைவி தீபா வீட்டில் கழிவறை இல்லை என தெரிந்து கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது எனக் கூறி கணவரைப் பிரிந்து தனது தாய்வீடான சேலத்துக்கு சென்றுவிட்டார். மேலும் தன் மனைவியை அழைத்து வர சேலம் சென்ற செல்லதுரை மனைவியை அழைத்தபோது வர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த செல்லதுரை என்ற வாலிபர் திருமணமாகி மூன்றாவது நாளில் கோட்ட கவுண்டம்பட்டி அருகேயுள்ள விவசாயி தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இன்று அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்ற. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Des: In the absence of a toilet in the house, the romance of the wife has broken,

Recommended