தலையில் கல்லைபோட்டு ரவுடி கொலை !-வீடியோ

  • 6 years ago
கொலைவழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள பிரபல ரவுடியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி அய்யாவு மீது நான்குக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இவர் தற்போது கொலைவழக்கு ஒன்றில் பிணையில் வந்துள்ளார். அய்யாவு தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி அடிதடி தகராரில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில் அய்யாவுக்கும் அதேபகுதியை சார்ந்த ஆறுமுகம் என்பவருடதலையில் கல்லைபோட்டு ரவுடி கொலை !

கொலைவழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள பிரபல ரவுடியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி அய்யாவு மீது நான்குக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இவர் தற்போது கொலைவழக்கு ஒன்றில் பிணையில் வந்துள்ளார். அய்யாவு தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி அடிதடி தகராரில் ஈடுபட்டுவந்தார். இந்தநிலையில் அய்யாவுக்கும் அதேபகுதியை சார்ந்த ஆறுமுகம் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஆரம்பித்த தகராறு பின்னர் சண்டையாக மாறி இருவரும் அடித்துக் கொண்டனர். அப்போது மதுபோதையில் இருந்த அய்யாவு நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து ஆறுமுகம் அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து அய்யாவு தலையில் போட்டதில் தலைநசுங்கி அய்யாவு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டிஎஸ்பி அய்யாவு உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலைசெய்து விட்டு தப்பி ஓடிய ஆறுமுகத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Des: The murder of the famous Rowdy headed out of jail in jail was caused by the murder of a stone.

Recommended