ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பு! சமூகவிரோதிகளுக்கு வலைவீச்சு

  • 6 years ago
ரயிலை தடம்புரள செய்ய தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பு வைத்திருந்த சம்பவம் குறித்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி கடந்த 30ந் தேதி இரவு மின்சார ரெயில் சென்றது. வேளச்சேரியில் இருந்து சிறுது தூரம் சென்றபோது தண்டவாளத்தில் சத்தம் கேட்டதால் ரெயிலை நிறுத்திவிட்டு டிரைவர் கிருஷ்ணன் இறங்கி பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் மர்ம ஆசாமிகள் சிமெண்ட் சிலாப்புகளை வைத்ததிருந்ததால் அதில் ரெயில் ஏறியது தெரியவந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.இது பற்றி வேளச்சேரி ரெயில் நிலைய அதிகாரி கண்ணன் திருவான்மியூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரும் நிலையில் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தவும் ரயில்வேயின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும்தமிழக ரெயில்வே மற்றும் போலீஸ் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவம் நடைபெற்ற வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.

Police extra DGP on raid on the train Cylindrababu studied in person.

Recommended