சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்து, வரும் 28ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம்

  • 6 years ago
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய மாநில அரசுகள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது இல்லை என்ற வாக்குறுதியை கடைபிடிக்கவில்லை என்று தெரிவித்தார். வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதால் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறினார். மேலும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு அதுகுறித்து, பொதுமக்களுக்கும், வியபாரிகளுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Recommended