காப்பாற்றுபவர்களுக்கே இந்த நிலை… அப்ப நமக்கு…

  • 6 years ago
காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் காவேரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவேரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் முக்கொம்பு தடுப்பின் 9 மதகுகள் கடந்த 2ம் தேதி உடைந்தது. உடைந்த மதனை சீரமைக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்புக்கா தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தீயணைப்பு துறையை சேர்ந்த கனகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் ரப்பர் படகில் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரின் வேகத்தில் ரப்பர் படகு அடித்து செல்லப்பட்டது. இரண்டு வீரர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அதனை கண்ட பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக இருவரையும் மீட்டனர். முக்கொம்பு அணைபகுதியில் தீயணைப்பு வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The fire broke out at the Kopidam river in the rubber raft.

Recommended