மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அவலம்
  • 6 years ago

பள்ளி படிப்பை முடித்து பல்வேறு கனவுகளுடன் செவிலியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், ஏழை எளிய மாணவிகள் தனியார் பயிற்சி நிறுவனங்களில், செவிலியர் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் அவர்களில் பலருக்கு படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய செல்லும் போதுதான் மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவர்கள் படித்த செவிலியர் பயிற்சி நிறுவனம் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான், இதனைகேட்டு கலங்கிய மாணவிகளின் கனவுகளும் கனால் நீராக மாறுகிறது என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. எனவே செவிலியராக நினைக்கும் மாணவிகள், செவிலியர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு முன்னதாக, அந்த பயிற்சி பள்ளி உரிய அங்கீகாரம் பெற்றா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறார் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் அனில் கிரேஸ் கலைமதி. அவருடன் எமது செய்தியாளர் நவ்ஷத் நடத்திய கலந்துரையாடலின் போது, மாணவிகளுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளை தற்போது பார்க்கலாம்.....