கட்ட பஞ்சாயத்து… நாட்டாமை தீர்ப்பு…வீடியோ

  • 6 years ago
வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் கூலித் தொழிலாளி. இவருக்கு கலா என்கிற மனைவியும் சதீஷ், சஞ்சய் சரண்யா என 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் இவரது சகோதரர்களுக்குமிடையே வீடு பாகப்பிரிவினை தொடர்பாக இருந்து வந்த பிரச்சினையில் ஊர் துணை நாட்டாமை கோவிந்தன் கட்டப்பஞ்சாயத்து செய்து வெங்கடேசனுக்கு சேரவேண்டிய 0.5 சென்ட் இடத்தை அவரது அண்ணன் முனியப்பனிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு சேருவதாக மிரட்டி வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று மீண்டும் இவர்களுடைய குடும்ப பிரச்சினையில் கோவிந்தன் தானாக முன்வந்து உன்னுடைய அண்ணன் ராமமூர்த்தி உன் மீது புகார் கொடுத்துள்ளதாக துணை நாட்டாமை கோவிந்தன் ,அவரது தம்பி நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 க்கும் மேற்பட்டோர் கட்டப்பஞ்சாயத்து செய்து வெங்கடேசனை உன்னுடைய தாயாரை நீ கவனிப்பதில்லை என்பதால் 1 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என மிரட்டியுள்ளனர் .அபராத தொகையை கட்ட முடியாததால் வெங்கடேசன் நீதி கேட்டு மேல்பட்டி காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சினையில் ஊர் துணை நாட்டாமை கோவிந்தன் ,அவரது தம்பி நாராயணன் தானாக முன்வந்து தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ளார் .தங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அறிந்த கோவிந்தன் அவரது தம்பி நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 க்கும் மேற்பட்டோர் வெங்கடேசன் அவரது மனைவி கலா மற்றும் ,குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அவர்களுக்கு பயந்து கொல்லை புறமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் .இதனை அறிந்த துணை நாட்டாமை கோவிந்தன் ஆதரவாளர்கள் வெங்கடேசனின் வீடு புகுந்து டிவி ,கதவு ,ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகளை உடைத்து சூறையாடியுள்ளனர் .இது குறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பேர்ணாம்பட்டு அருகே குடும்ப பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்து 1 லட்சம் அபாரத தொகை கட்டவேண்டும் எனவும் , கூலித்தொழிலாளி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களை கட்டப்பஞ்சாயத்தார் மிரட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Des : Venkatesan Kulith worker belongs to Sankarapuram area of Vellore district. She has three children - Kala, wife of Satish and Sanjay Saranya

Recommended