நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம்
  • 6 years ago
நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு நிர்ணயம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்படவுள்ளது. மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மக்களவைக்கு அடுத்தாண்டு ஏப்ரலிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளன. செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து மாநில சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளின் ஒத்துழைப்பு, மின்னணு இயந்திரத்தில் உள்ள நிறைகுறைகள், தேர்தலுக்கான விதிமுறைகளை சம்மந்தப்பட்டவர்கள் கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளன
Recommended