ஸ்டெர்லைட் வாயில்கள் முடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் பேட்டி- வீடியோ

  • 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாயில்களும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக ரீதியில் இயங்க தேசியபசுமை தீர்ப்பாணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது தூத்துக்குடி ஸ்டெர்ட்லைட் ஆலையில் தற்போது எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்றும் அமிலங்கள் அகற்றப்படுவதற்காக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களும் விலக்கி கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். தற்போது ஆலையின் அனைத்து வாயில்களும் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆட்சியர், நிர்வாக ரீதியாக ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாணையம் அளித்திருந்த உத்தரவின்படி ஆலை தரப்பில் இருந்து யாரும் அணுகவில்லை என்றார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் ஆலோசனைப்படி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இதனிடையில் தூத்துக்குடி இந்திராநகர், தாளமுத்துநகர் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். அதில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்ததாகவும், பலதேவையற்ற வதந்திகளால் ஆலை மூடப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலையில் வேலை செய்யும் காலத்தில் தங்களுக்கு எந்தவித நோய்கள் வந்ததுகிடையாது என்றனர். ஆலை மூடப்பட்டுள்ளதால் வேறு வேலை கிடைக்காமல் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தமடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளதால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என புகாரில் தெரிவித்தனர்.

Des : All the gates of the Sterlite plant are sealed and the police are in security.

Recommended