பொய்யான தகவலால் அதிகாரிகள் குழப்பம்- வீடியோ

  • 6 years ago
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம்,பைரப்பள்ளி பகுதிகளில் விவசாய நிலங்களில் 1௦ க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு 5 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2௦ க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாகவும் ,இதில் வாலிபர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஆம்பூர் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாட்சியர் சுஜாதா பைரப்பள்ளி மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் தேவன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் அதன் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது கொத்தடிமைகளாக யாரும் பணியமர்த்தப்பட வில்லை என்பதும் அனைத்தும் புரளி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். மேலும் அப்பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் உடனடியாக அனுமதி பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.