நான்காவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் 50 ஆயிரத்திற்கு விற்ற தாய்- வீடியோ

  • 6 years ago
சேலம் அரசு மருத்துவமனையில் நான்காவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தை 50 ஆயிரத்திற்கு விற்ற தாய்



மனமாற்றம் காரணமாக குழந்தையை மீட்டு தரக்கோரி விற்க தூண்டுதலாக இருந்த அரசு மருத்துவமனை ஒப்பந்த துப்புரவுப் பெண்ணிடம் தாய் கதறல், காவல்துறையினர் விசாரணை.



சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவர் ராணி இவருக்கு முதல் திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில், விவாகரத்து செய்து பாலு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கர்ப்பமடைந்த ராணி பிரசவத்திற்காக கடந்த மே மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இவருக்கு மீண்டும் நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால், இரண்டாவது கணவன் பாலும் ராணியை விட்டு விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆதரவற்று அழுது கொண்டிருந்த ராணியை அரசு மருத்துவமனை துப்புரவு ஒப்பந்த தொழிலாளர் ஜெயா என்பவர் அவரிடம் அணுகி நான்காவது பெண் குழந்தையை விற்பனை செய்வது குறித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேச்சேரி சென்று ஐம்பதாயிரம் பணத்தைக் கொடுத்து குழந்தையை வாங்கி சென்று விடுகின்றனர். இதையடுத்து குழந்தையைப் பிரிந்த ராணி மனம் மாறி மீண்டும் அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட துப்புரவு தொழிலாளரிடம் எனது குழந்தை திருப்பி தந்து விடுங்கள்,பணத்தை திருப்பித் தருவதாகவும் பேசியுள்ளார். அதை மறுத்த ஜெயாவிற்கும் ராணிக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக பெண் குழந்தையே தாயே விற்றதும், இதற்காக அரசு மருத்துவமனை ஒப்பந்த துப்புரவு பணியாளர் இடைதரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் பணம் கொடுத்து குழந்தையை வாங்கிச் சென்றவர் யார் என்பது குறித்தும், குழந்தையை மீட்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended