வெள்ள அபாய எச்சரிக்கை

  • 6 years ago
மேட்டூர் அணை 5 வருடங்களுக்குப்பிறகு முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயப் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் அணைக்கு கர்நாடகாவில் இருந்து தற்போது வந்துகொண்டிருக்கும் உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு நீர்திறப்பு 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த நீர்திறப்பு அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டுக்கொண்டே வந்தது. இன்று இரவு 8 மணிக்கு 65000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு இந்த நீர்திறப்பின் அளவு 75 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு நீர்திறப்பு 80 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் காவிரிக்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பன இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

Mettur Dam has been completed in five years. Thus the flood victims have been issued flood victims

Recommended