வருமான வரித்துறை சோதனைகள் ஒரு பார்வை- வீடியோ

  • 6 years ago
தமிழ்நாட்டில் அதிமுக அமைச்சர்கள் மீதும், அதிமுக ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீதும் பல முறை வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன. அரவக்குறிச்சி தேர்தலின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான கரூர் அன்புநாதன் வீட்டில் 22.4.2016 அன்று வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. 4.77 கோடி ரூபாய் ரொக்கம், 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை வாங்கிய கணக்குகள், பணம் எண்ணும் மெஷின்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. ஏறக்குறைய 27 மாதங்களாகியும் இன்றுவரை அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்றே தெரியவில்லை. 12.9.2016 அன்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஆகியோர் மீது ரெய்டு நடத்தப்பட்டது. 22 மாதங்களுக்கு மேலாகியும் அந்த ரெய்டுகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் என்னவென்றே தெரியவில்லை. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் கூட்டாளி சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் 9.12.2016 அன்று வருமான வரித்துறை ரெய்டு செய்தது. அந்த வழக்கிலும் 19 மாதங்கள் ஆகியும் மேல் நடவடிக்கை என்னவென்று தெரியாமல் இன்னும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகிய அனைத்து துறைகளுமே கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கின்றன. அதிமுக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் 21.12.2016 அன்று ரெய்டு நடந்தது. 19 மாதங்கள் ஆன பிறகும் இன்றுவரை அவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. 12.4.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் என்று 32 இடங்களில் 7.4.2017 அன்று வருமான வரித்துறை ரெய்டு செய்தது. குவாரியில் மட்டும் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு என்று செய்திகள் வந்தது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பத்து அமைச்சர்கள் மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்த பட்டியல் கைப்பற்றப்பட்டது. இதனால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இடைத் தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஏழு மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் ரெய்டு செய்யப்பட்டு 15 மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1800க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து தமிழ்நாடு முழுவதும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் 8.11.2017 அன்று “மெகா ரெய்டு” நடத்தப்பட்டது. 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. போயஸ் கார்டனில் 17.11.2017 அன்று ரெய்டு நடந்தது. மேல் நடவடிக்கை இல்லை. இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரித்துறை சோதனைகளில் சிக்கிய தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது ஊழலுக்கும், சொத்து குவிப்பிற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கோ அல்லது சி.பி.ஐ.க்கோ ஏன் வருமான வரித்துறை அறிக்கைகளை அனுப்பாமல் தாமதம் செய்கிறது என்பது புதிராகவும், மர்மத் தொடர்கதை போலவும் நீடிக்கிறது. இந்நிலையில் முதலமைச்சரின் சம்பந்தியின் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை முதலமைச்சரின் துறையிலேயே எடுத்த ஒப்பந்ததாரர் நாகராஜன் செய்யாதுரை வீட்டிலும், அலுவலகங்களிலும் 180 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 100 கிலோவிற்கு மேல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உதவியாளர் வீடுகளில் இருந்து எல்லாம் ஆவணங்களும், பணமும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஜூலை 16 ஆம் தேதி தொடங்கிய "ரெய்டு" இன்னும் முடிவுக்கு வராமல் தொடருகிறது. வருமான வரித்துறையின் ரெய்டுகளும் அதன் பின்னனி குறித்த விபரங்களும் இன்னும் வெளிப்படாமல் உள்ளது புரியாத புதிராக உள்ளது.

des: Many of the Income Tax Reeds have been held in AIADMK and AIADMK officers in Tamil Nadu.

Recommended