சீமானுக்கு ஜாமீன் வழங்கிய சேலம் நீதிமன்றம்- வீடியோ

  • 6 years ago
8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சீமானுக்கு ஒரே நாளில் சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் பரபரப்பு…

சேலம் -சென்னை 8 வழி பசுமைச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க சென்றார். அப்போது அவரை மல்லூர் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த 9 பேரும் கைது செய்யப்பட்டு நேற்று நள்ளிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் கோரி சேலம் 6 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதித்துறை நடுவர் மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் சென்னை வக்கீல் அறிவுசெல்வன் ஆஜரானார். அப்போது அவர் வாதிடுகையில் 8 வழி பசுமைச்சாலைக்கு நிலம் கொடுக்க மக்கள் மறுத்து வருகின்றனர். அவர்களின் குறைகளை கேட்பதற்காக சீமான் சென்றபோது போலீசார் சட்டவிரோதமாக கைது செய்தனர் என்ற தகவலை கூட தெரியாமல் அவசர கோலத்தில் கைது செய்தனர் திட்டம் குறித்து மக்களிடம் பேசுவதை தடுப்பதன் மூலம் பேச்சுரிமை பறித்துள்ளார் இது கண்டனத்துக்குரியது. எனவே சீமான் உட்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

des: 8 way to plead people against the greenery

Recommended