ரயில் தண்டவாளம் அருகே சிறிய கால்வாயில் தவறி விழுந்த மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
திருச்சி உறையூரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் மாடுகளை வளர்கும் தொழில் செய்து வருகிறார்.இவருடைய நான்கு எருமை மாடுகள் இன்று காலை கோட்டை ரயில் நிலையம் அருகே மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது அவ்வழியே கரூரிலிருந்து திருச்சி நோக்கி பயணிகள் ரயில் வந்தது அப்போது தண்டவாளத்தை அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் கடந்தன.அதில் மூன்று மாடுகள் தவறி அருகே இருந்த சிறிய கால்வாயில் தவறி விழுந்தன.இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று கால்வாயில் விழுந்து கிடந்த மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினர்.சிறிய கால்வாயாக இருந்ததால் மாடுகளை மீட்பதில் சிரமம் ஏற்ப்பட்டது.பின் சுமார் ஒரு மணி நேர முயற்சிக்கு பின்பு மூன்று மாடுகளையும் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.