இலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை...வீடியோ

  • 6 years ago
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே மற்றும் அணி மேலாளார் அசங்கா குருசின்கா ஆகியோருக்கு, நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்திய காரணத்தால், ஐந்து ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, அடுத்த நாள் மைதானத்திற்குள் வராமல் இருந்தது இலங்கை அணி. இதனால், ஆட்டம் துவங்க இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர், இலங்கை அணி ஆட்டத்தில் பங்கேற்றாலும், ஐசிசி விதிகளை மீறிய கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


Sri Lanka captain Dinesh Chandimal, coach Chandika Hathurusinghe and manager Asanka Gurusinha have all been suspended for the first four ODIs and two tests.

Recommended