தாய்லாந்தில் குகைக்குள் சிக்கி தவிக்கும் 13 பேரில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

  • 6 years ago
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. மீட்ப்புப்பணியில் சிறப்பான முன்னேற்றமாக 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று முன் தினம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV