செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

  • 6 years ago
செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மஹிந்தரா சிட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென நிலவு அதிர்வு ஏற்பட்டது. மஹிந்தரா சிட்டி பகுதியை சுற்றியுள்ள அஞ்சூர், குன்னவாக்கம், மேல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். மஹிந்தரா சிட்டியில் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நில அதிர்வு ஏற்பட்ட போது அங்குள்ள அவசர கால ஒலி எழுப்பட்டதால் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சில வினாடிகள் உணரப்பட்ட நில அதிர்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended