இன்றைய தலைப்பு செய்திகள் | #TodayHeadlines | (04.07.18) #Sathiyamnews

  • 6 years ago
சென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...... போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் நடவடிக்கை.........

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 70 போலீசார் மீது தாக்குதல்.... போலீசார் மீது அத்துமீறும் ரவுடிகள்-மர்மநபர்கள் மத்தியில் கேள்விகுறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு....

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.... இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து இன்று விசாரணையை தொடங்குகிறார் 3 வது நீதிபதி சத்யநாராயணன்......

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்பு..... இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்...... நேபாளம் விரைந்தது தமிழக அதிகாரிகள் குழு... நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை.......

கொள்ளைபுறம் வழியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி..... மக்களை மீண்டும் போராட்டத்திற்கு தூண்டும் செயல் என திருமாவளவன் குற்றச்சாட்டு.......

தமிழக அரசுடன் ஆன பேச்சுவார்த்தையில் தோல்வி.... ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.......

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் போராட்டம்... 19 பேரை கைது சிறையில் அடைத்தது காவல்துறை........

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் குழுவில் இடம் பெற மருத்துவர்கள் தயக்கம்... வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவர்களை அழைக்க ஆறுமுகசாமி ஆணையம் முயற்சி.....

இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி... லோகேஷ் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி.....

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended