உலக கோப்பை கால்பந்து காலிறுதி சுற்றுக்கு பிரேசில், பெல்ஜியம் அணிகள் தகுதி
  • 6 years ago
நாக் அவுட் சுற்றில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில், மெக்சிகோ அணிகள் மோதின. இதில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், பிர்மினோ தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் முடிவு வரை மெக்சிகோ கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில், காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இரவு 11.30மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், பெல்ஜியம், ஜப்பான் அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சாட்லி அடித்த கோலால், அந்த அணி திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended