உலகக் கோப்பை கால்பந்து இன்றைய தினம் இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெறுகின்றன
  • 6 years ago
இரவு 7.30 மணிக்கு சமரா அரங்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் பிரேசில் , மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. பிரேசில் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ 15-வது இடத்திலும் உள்ளது. ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் அணிகள் வெளியேறிய நிலையில், நெய்மரின் பக்கம் பலரது பார்வையும் திரும்பி இருக்கிறது. இந்நிலையில், இரவு 11.30 மணிக்கு ரொஸ்டொவ் அரங்கத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம், ஜப்பான் அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் பெல்ஜியம் 3-வது இடத்திலும், ஜப்பான் 61-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலிருந்து தகுதிபெற்ற ஒரே அணி என்பதால் ஜப்பான், காலிறுதிக்கு மென்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended