மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

  • 6 years ago
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சிவநேசன், அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த 2016 ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆசிரியர் சிவநேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிவநேசன், தண்டனையை நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து போதிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்று கூறினார். மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர் சிவநேசன் தகாத முறையில் நடந்துள்ளார் என கூறிய நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended