தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தேசிய ஆணையம் இன்று முதல் விசாரணையை தொடங்க உள்ளது
  • 6 years ago
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களிள் 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் தலைவர் முருகன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த காளியப்பன், கந்தைய்யா, ஜெயராம், செல்வ சேகர் ஆகிய 4 பேரின் குடும்பத்தினருடன், காலை 11 மணிக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரிக்க உள்ளனர். நாளை முன்னாள் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன், மற்றும் DIG-யிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து, 30ந் தேதி, தற்போதய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் பணியில் உள்ளவர்களிடம் விசாரிக்க உள்ளனர். 3 நாள் விசாரணையை முடித்துக்கொண்ட பின்னர் 1-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended