மருத்துவம் - பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

  • 6 years ago
சென்னை, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தடைந்தது. இந்நிலையில் தரவரிசை பட்டியல் நாளை காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோல பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை காலை வெளியிடப்பட உள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended