உலகக் கோப்பை கால்பந்து - இன்று யார், யார் எந்தெந்த ஆட்டங்களில் மோதுகிறார்கள்
  • 6 years ago
இன்று இரவு 7.30 மணிக்கு, கசான் நகரில் நடைபெறும் ஆட்டத்தில், மூன்று முறை உலகச் சாம்பியனான ஜெர்மனி அணியும், ஆசிய சாம்பியனான தென்கொரிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிப் பெறும் அணி, நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது ஆட்டமும், இரவு 7.30 மணிக்கு, ஸ்வீடன் அணியும் மெக்சிகோ அணியும் மோதுகின்றன. ஏக்தெரின் பெர்க் நகரில் நடைபெறும் இப் போட்டியில், F பிரிவிலிருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப் பெறும் 2-வது அணி எது என்பது முடிவாகும்.
3-வது ஆட்டத்தில், பிரேசில் அணியும் செர்பிய அணியும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் அணி யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாளின் கடைசி ஆட்டம், இரவு 11.30 மணிக்கு, நோவோ க்ராட் நகரில் நடைபெறுகிறது. இப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியும், கோஸ்டாரிகா அணியும் மோதுகின்றன. இளம் வீரர்கள் அடங்கிய இவ் விரு அணிகள் மோதும் இந்த ஆட்டமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended