சட்டப்பேரவையில் குட்கா வழக்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க திட்டம்

  • 6 years ago
கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் துறையான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் இன்றைய கூட்டம் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை வழங்கி அறிவிப்புகளை வெளியிடுவார். இன்றைய கூட்டத்தில் குட்கா விவகாரத்தை எழுப்பி, தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் பதவி விலக வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் 7 ஆண்டுகள் சிறை என்ற அறிவிப்பு போன்றவற்றை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended