தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆய்வு

  • 6 years ago
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஒரு மாதங்கள் கழிந்த பின்னர், துப்பாக்கி சூடு நடந்த இடங்களை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடன் சென்ற தடயவியல் நிபுணர்கள் துப்பாக்கி சூடு நடந்தபகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடயங்களை சேகரித்தனர்.ஏற்கனவே துப்பாக்கி சூட்டின்போது போலீசார் பயன்படுத்திய தோட்டாக்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், எஞ்சிய தோட்டாக்களை போலீசாரிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended