குட்கா ஊழல் வழக்கு - தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை

  • 6 years ago
குட்கா போன்ற போதை பொருட்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், தமிழகத்தில் அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி பல்வேறு இடங்களில் குட்கா அனைத்து இடங்களிலும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சி விரிவான செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் சில காவல் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இவர்களை பதவி நீக்கம் வேண்டும் எனக் கோரி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல கட்ட விவாதங்களுக்கு பின்னர் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, சிபிஐ விசாரணைக்கு தடைகோரி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள்,சென்னையில் உள்ள தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தினர். குட்கா வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார் என்றும், அவருக்கு குடோன் அமைக்க அனுமதி அளித்த மற்றும் அந்த குடோனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார்? என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், குட்கா ஊழல் நடந்தபோது பதவியில் இருந்த அதிகாரிகளின் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் பெற்றுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended