இரு தேர்தலையும் ஏற்க முடியாது தம்பிதுரை பாய்ச்சல்- வீடியோ

  • 6 years ago
வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்துள்ளனர். அடிக்கடி தேர்தல் நடத்தினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது என்றும் 2021-ல் பொதுமக்கள் கருத்து கேட்டு வேண்டுமானால் 2024-ல் ஒரே நேரத்தில் தேர்தல் வைத்துக் கொள்ளலாம். கூடவே உள்ளாட்சி தேர்தலுக்கும் கூட தேர்தலை நடத்தி விடலாம். என்றார் மேலும் தன்னை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பது தேவை இல்லாத ஒன்று என்றும் இடைத் தேர்தலால் பல பிரச்சனைகள் உருவாகின்றது. இது பொது தேர்தலையும் பாதிக்கிறது என்றார்

Des: Lok Sabha Deputy Speaker Thambidurai said that the 2019 Parliament and the Legislative Assembly can not accept the election

Recommended