நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் ஆற்றில் டைவ் அடித்து பலி !- வீடியோ

  • 6 years ago
நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தேனி மூணான்டிபட்டியை சார்ந்த செல்வம் என்பவரது இரண்டாவது மகன் சுந்தரேசன் தனது நண்பர்களுடன் முல்லைபெரியாற்றில் குளிக்கசென்றுள்ளார் குளித்து முடித்து விட்டு நண்பர்கள் அனைவரும் உடைமாற்ற சென்றுள்ளனர் அப்போது இறுதியாக குளித்து கொண்டு இருந்த சுந்தரேசன் ஆற்றில் தாவிக்குளிக்க முற்படும் போது ஆற்றிற்குள் இருந்த பாறையில் அவரது தலை மோதியது.இதில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுந்தரேசன் தண்ணீரில் மூச்சு விட முடியாமல் மயங்கிய நிலையில் அவரது உடல் மிதக்க ஆரம்பித்துள்ளது.அருகே துணி துவைத்து கொண்டு இருந்தவர்கள் பார்தது சத்தமிட்டனர்.உடனே அருகே இருந்த பொது மக்கள் மற்றும் சுந்தரேசனின் நண்பர்கள் சுந்தரேகனை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.உடனடியாக சின்னமன்னுர் காவல்துறைக்கும் 108 ஆம்புளலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு வரைந்து வந்து சுந்தரேசனை பரிசேதனை செய்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Recommended