பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் | யாகம் நடத்தினால் முதல்வர் ஆகலாமா?..ராமதாஸ்- வீடியோ

  • 6 years ago
கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 10,500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாம்பழங்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு, பின்பு அதில், கார்பைட், எத்தலீன் போன்றவற்றை பயன்படுத்தி செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது இயற்கை முறையில் மாம்பழம் 10 நாட்களில் பழுக்கிறதென்றால் எத்தலீன் வாயுவினால் பழுக்க வைத்தால் 5 நாட்களில் பழுத்துவிடுமாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறந்த மூடநம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிடலாம் என்பதுதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி ஸ்ரீரங்கம் கோவிலில் சுக்கிரபுத்திர யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை ராமதாஸ் இருவேறு டுவீட்களில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Officials confiscated 10,500 kgs of artificially ripened mangoes.

Ramadoss asks Stalin about Sukkiraputhiri Yagam. If it does he may become CM of Tamilnadu?