அழகு மயில்.. மின் கம்பியில் மோதி பலி- வீடியோ

  • 6 years ago
ஈரோடு அருகே விருப்பம்போல் சுற்றித்திரிந்த மயில் ஒன்று, மின் கம்பியில் மோதி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. தேசிய பறவையான மயில் பாதுகாக்கப்பட்டு வருவதால் இவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்த போதும் இதனை கட்டுப்படுத்த இயலவில்லை. கிராம பகுதிகளில் சுற்றிதிரிந்த மயில்கள் தற்போது நகர பகுதிகளுக்குள்ளும் ஊடுருவ தொடங்கியுள்ளது.

ஆசிய அளவில் ஜப்பானில் நடைபெற்ற ஜுனியர் தடகள போட்டிகளில் கோவையை சேர்ந்த வீரர் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதித்து உள்ளார். ஜப்பானில் ஆசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தடகள வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Recommended