மேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி - வீடியோ

  • 6 years ago
எழுமின் படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடித்துள்ள படம் எழுமின். இந்த படத்தில் ஆறு சிறுவர்கள் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்கிரீனில் குழந்தைகளுடைய இன்ட்ரோ பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போது எல்லாம் மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த உடனேயே முதலில் கேமராவை காண்பிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சிம்புவை விட பயங்கரமாக பேசுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. சிம்பு சின்னப் பையனாக இருந்தபோது பேசியது நமக்கு எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. என்னப்பா இந்த பையன் இந்த போடு போடுகிறான் என்று. அதை எல்லாம் மிஞ்சியது போன்று இந்த சிறுவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் செல்ஃபி பிராண்ட் கிட்ஸ் என்பதால் கேமராவை பார்த்து எந்த பயமும் இல்லை. நான் கல்லூரி, பள்ளி விழாக்களுக்கு செல்கிறேன். அனைவரும் சினிமாவை நோக்கி தான் செல்கிறார்கள். சினிமா பாட்டு பாடுகிறார்கள், டான்ஸ் ஆடுகிறார்கள். அனைவரும் சினிமாவை நோக்கியே செல்வதாக தோன்றியது.



Karthi said that the kids who have acted in Ezhumin movie have performed much better than Simbu. He said so at the trailer launch of the movie Ezhumin. Karthik teased and made fun of Simbu in the audio launch which made everybody laugh including simbu.

#ezhumin #audio #trailer #launch #karthi #simbu #vishal

Recommended