கண்காட்சியில் சாகசங்களை செய்த நாய்!

  • 6 years ago
கோடை விழாவினையொட்டி நடைபெற்ற நாய் கண்காட்சி மற்றும் படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சேலம்மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 12ம்தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. கடைசி நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அடாத மழை பெய்தாலும் அதனைசிறிதும் பொருட்படுத்தாமல் பூங்காக்களிலும், படகு இல்லத்திலும் சுற்றுலாபயணிகள் குவிந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கால்நடைபராமரிப்பு துறை சார்பில் நாய் கண்காட்சி நடத்தப்பட்டது. பொமேரியன், ஜெர்மன் செப்பேடு, டாபர்மேன், உள்ளிட்ட வகையைசேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றன.நாய்களின் பராமரிப்பு, எஜமானுக்கு கீழ்படிதல் உள்ளிட்ட தகுதிகளின்அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Tourists were enthusiastic at the Dog Exhibition and Boat Tournament at the Summer Festival

Recommended