இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி.

  • 6 years ago
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். மேலும் இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Plus 2 results will be announced today morning by 9.30 am. We can see the statistics on the Internet says director of government exams.

Recommended