ஜெயலலிதாவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்- வீடியோ

  • 6 years ago
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மகாநதி என்று பெயர் வைக்கப்பட்ட படம் ரிலீஸாகியுள்ளது.
படத்தை பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
மகாநதி படத்தை பார்த்த பிரபலங்கள் கீர்த்தி சாவித்ரியாகவே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பலரோ சாவித்ரியாக கீர்த்தியை பார்க்க முடியவில்லை. கீர்த்தி பெருமுயற்சி செய்துள்ளார் அதை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அவரால் சாவித்ரியாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாமா என்று யோசனையில் உள்ளார்களாம்.



Buzz is that Keerthy Suresh may act as former CM Jayalalithaa in her biopic.


#keerthisuresh #biopic #next #movie #jayalalithaa

Recommended