உலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு கைதி தற்கொலை- வீடியோ

  • 6 years ago
சூனாம்பேடு காவல்நிலையத்தில் இறந்த சிற்றரசுவின் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ' விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு ஊழியர் சிற்றரசு கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு, அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நீண்டநாள்களாகவே நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்துள்ளது. சுவாதி கொலை வழக்கின் கொலையாளி ராம்குமார் மின் வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என நீதிபதி தமிழ்ச்செல்வியின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், மின்சார பாதிப்பு, கீழ் உதட்டின் உட்புறம் மட்டுமே ஏற்பட வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. நிச்சயம் பல், நாக்கு, மேல் உதடு, பல்லுக்கும் உதட்டிற்கும் இடையிலுள்ள ஈறு, இவற்றில் எந்த பாதிப்பும் இல்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருப்பதை நீதியரசர் அவர்கள் 'இது எப்படி சாத்தியம்?' எனக் கேள்வி கேட்டிருந்தால் அது மின்சாரம் மூலம் ஏற்பட்ட கொலையாகக்கூட இருக்கலாம் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கும். ஆக, நீதிபதி அறிக்கை கொடுத்துவிட்டார் என்பதாலேயே உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என எடுத்துக் கொள்ளமுடியாது என்பது தெளிவு. மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்' என விவரித்திருக்கிறார்.


Mystery surrouds the alleged custodial death of Govt Staff Sitrarasu in Chunambedu police station.

Recommended