நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்!

  • 6 years ago
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ஜெம் லெபாலட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசால் மாற்றப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவானது. இதையடுத்து ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்தமானது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு கருதி, பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். எனவே, விரைவில் மத்திய அரசு வேறு இடத்தை ஒதுக்கினால், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் கைவிடும் என தெரிகிறது. இது பொதுமக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Hydrocarbon plan may be withdrawn from Neduvasal, by gem company, says sources

Recommended