பெண்களின் பிரச்சினையைப் புரிந்து கொண்டேன்: நடிகர் தமன்

  • 6 years ago
சினிமாவில் மட்டும் அல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒரு பெண் அதில் வெற்றி பெறுவது என்பது ரொம்பவே பெரிய விஷயம். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள் என்பதை யாளி படம் மூலம் புரிந்துக்கொண்டேன் என நடிகர் தமன் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலாபக்காதலன் படத்தில் நடித்த அக்‌ஷயா, மீண்டும் நாயகியாக நடித்துள்ள படம் யாளி. கணவர் பாலச்சந்தர்.டி. தயாரித்துள்ள இப்படத்தை அக்‌ஷயாவே இயக்கியுள்ளார். நடிகர் தமன் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படம் குறித்து நாயகன் தமன் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "சினிமாவில் மட்டும் அல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒரு பெண் அதில் வெற்றி பெறுவது என்பது ரொம்பவே பெரிய விஷயம். என் அம்மா ஆசிரியையாக இருந்தவர். ஆனால், அவரை வீட்டில் நாங்கள் சாதாரணமாகத் தான் பார்ப்போம். ஆனால், இப்படத்தில் நடித்தபோதுதான், பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள், என்பதை அக்‌ஷயாவைப் பார்த்து, நான் புரிந்துக்கொண்டேன். அக்‌ஷயா இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் நடிகையாக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றி பெறுவார்" என்றார்.


In an interview to oneindia, the upcoming tamil movie yalee's hero Thaman has said that he understood the suffering of omen through this movie. Yaali movie first look poster function.. Actor Thaman special interview.

#yaali #thaman #firstlook #poster

Recommended